முகப்பு
தற்போதைய செய்திகள்

பாலத்தில் இருந்து கார் விழுந்து விபத்து : இரு சக்கர வாகனத்தில் சென்றவர் பலி

சாத்தூர், ஆக., 24 : சாத்தூரில் தடையம்பட்டி அருகே நான்கு வழி சாலையில் திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார், மேம்பாலத்தில் ஏறும் போது டயர் வெடித்து நிலை தடுமாறிச் சென்று பாலத்தி

Updated On : 26 செப்டம்பர், 2012 at 11:30 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:07 AM

சாத்தூர், ஆக., 24 : சாத்தூரில் தடையம்பட்டி அருகே நான்கு வழி சாலையில் திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார், மேம்பாலத்தில் ஏறும் போது டயர் வெடித்து நிலை தடுமாறிச் சென்று பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. அப்போது பாலத்துக்கு அருகே சர்வீஸ் சாலையில் ஓ. மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்து கொண்டிருந்தார். மேம்பாலத்தில் இருந்து விழுந்த கார் அவர் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பலியானார். காரில் வந்தவர்களைப் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.