கர்ப்பிணி மனைவியை எரித்துக்கொன்று தலைமறைவான கணவன் கைது
திருப்பரங்குன்றம்,ஆக.30: மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே கர்ப்பிணிப் பெண்ணை எரித்து கொன்ற அவரது கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவனியாபுரம் எம்.எம்.சி காலனியில் வசிப்பவர் கதிரவன்(
திருப்பரங்குன்றம்,ஆக.30: மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே கர்ப்பிணிப் பெண்ணை எரித்து கொன்ற அவரது கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அவனியாபுரம் எம்.எம்.சி காலனியில் வசிப்பவர் கதிரவன்(28).இவர் லாரி கிளினராக பணி செய்கிறார்.இவருக்கும் சம்பக்குளத்தை சேர்ந்த புலியக்கோனார் மகள் சித்ராவிற்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.இவர்களுக்கு சர்மிளா என்ற ஒருவயது பெண் குழந்தை உள்ளது.கதிரவன் அவ்வப்போது குடித்துவிட்டு வந்து தன் மனைவியிடம் தகராறு செய்வாராம்.இந்நிலையில் சித்ரா 5 மாத கர்ப்பிணி என்பதால் மருத்துவ சோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக சம்பக்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் புதன்கிழமை சென்றுள்ளார்.
பின்னர் இரவு சற்று தாமதமாக வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து கதிரவன் தன் மனைவியிடம் ஏன் தாமதம் என்று கேட்டு தகராறு செய்து, குடிபோதையில் கடுமையாக அடித்துள்ளார். இதனால் சித்ரா தன் சித்தப்பாவிற்கு போன் செய்து, தன்னை கணவர் கண்டபடி அடிப்பதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அச்சமடைந்த சித்ராவின் உறவினர்கள் உடனடியாக எம்.எம்.சி காலணி பகுதிக்கு வந்துள்ளனர். வீட்டில் வந்து பார்த்தபோது எரிந்த நிலையில் சித்ரா பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து சித்ராவின் சித்தப்பா முருகன் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரவனை கைது செய்து விசாரிக்கையில், கதிரவன் குடிபோதையில் இருந்ததாகவும், மனைவி அடித்தபோது கீழே விழுந்து இறந்ததால் மண்ணெண்ணை ஊற்றி எரித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.