முகப்பு
தற்போதைய செய்திகள்

டெங்கு காய்ச்சல் தீவிரம் : மேலூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் மேலூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுகவினர் இன்று பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:46 PM
பகிர்:

மதுரையில் மேலூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுகவினர் இன்று பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகே டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளாத தமிழக சுகாதாரத் துறையைக் கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலூரில் இதுவரை 50 பேர் டெங்கு காய்ச்சல் பாதித்து இறந்துள்ளனர். எனினும், அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கொசு ஒழிப்புக்கு உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை, மருத்துவர் குழுவை நியமிக்கவில்லை என்று கண்டித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவின் முக்கியத் தலைவர்கள் சேப்பட்டி முத்தையா, மேலுர் திமுக செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →