முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோடு : டிச., 12ல் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்

இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் மாநில, மக்களவை தொகுதி நிர்வாகிகள், சட்டப்பேரவை தொகுதி தலைவர்கள் ஆகியோருக்கான மாநில அளவிலான தலைமைப்பண்பு பயிற்சி முகாம் ஈரோட்டில் டிச.12 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:48 PM
பகிர்:

இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் மாநில, மக்களவை தொகுதி நிர்வாகிகள், சட்டப்பேரவை தொகுதி தலைவர்கள் ஆகியோருக்கான மாநில அளவிலான தலைமைப்பண்பு பயிற்சி முகாம் ஈரோட்டில் டிச.12 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் பொறியியல் கல்லூரியில் இப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது. புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு தலைமைப்பண்பு பயிற்சி மையம் பயிற்றுநர்கள் மூலம் இப்பயிற்சி அளிக்கப்படும். மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றின் பயன்கள் குறித்து முழுமையான பயிற்சி அளிக்கப்படும்.

மாநில அளவிலான நிர்வாகிகள், மக்களவைத் தொகுதியில் உள்ள தலைவர்கள், பொதுச்செயலர்கள் மற்றும் துணைத்தலைவர்களும், சட்டப்பேரவைத் தொகுதியில் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்களும் மட்டுமே இப்பயிற்சி முகாமில் பங்கேற்பார்கள். மாநிலம் முழுவதும் 27,000 பேர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

அடுத்து வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பூத் கமிட்டி வாரியாக கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது என இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் எம்.யுவராஜா தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.