முகப்பு
தற்போதைய செய்திகள்

அவதூறு வழக்கு: ஜன-18ல் விஜயகாந்த் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 2013 ஜனவரி 18-ம்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:48 PM
பகிர்:

 தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 2013 ஜனவரி 18-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை உத்தரவிட்டார்.
விருதுநகரில் 3.8.11-ம் தேதி பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசும் போது தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை அவதூறாக பேசினாராம். இது குறித்து விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஏ.மங்களசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை புதன்கிழமை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, விஜயகாந்த் வழக்கு விசாரணைக்கு 2013 ஜனவரி 18-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →