ஸ்ரீவில்.,யில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டிகள்: ஒன்றியக் குழுத் தலைவர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியை போக்கி, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய 117 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து கூறினார்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்.,யில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டிகள்: ஒன்றியக் குழுத் தலைவர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியை போக்கி, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய 117 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியை போக்கி, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய 117 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து கூறினார்.
டி.மானகசேரி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 9 குடிநீர் தொட்டிகள் திறப்பு விழா, ஊராட்சி மன்றத் தலைவர் வேல்சாமி தலைமையில் நடைபெற்றது. கொங்கலாபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்து ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புற மக்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் இடைததரகர்கள் இன்றி நேரிடையாக கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 117 இடங்களில் போர்க்கால அடிப்படையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் சித்திரவேல், லட்சுமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமிதா, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. வினர் கலந்து கொண்டனர்.