மனைவி சொத்தை தன் பெயருக்கு மாற்ற வலியுறுத்தி துன்புறுத்தல்: கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
மனைவிக்கு அவரது தந்தை வழியில் வந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள சொத்தை, கணவர் பெயருக்கு எழுதித் தர வலியுறுத்தி மனைவியை துன்புறுத்திய கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்போதைய செய்திகள்மனைவி சொத்தை தன் பெயருக்கு மாற்ற வலியுறுத்தி துன்புறுத்தல்: கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
மனைவிக்கு அவரது தந்தை வழியில் வந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள சொத்தை, கணவர் பெயருக்கு எழுதித் தர வலியுறுத்தி மனைவியை துன்புறுத்திய கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மனைவிக்கு அவரது தந்தை வழியில் வந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள சொத்தை, கணவர் பெயருக்கு எழுதித் தர வலியுறுத்தி மனைவியை துன்புறுத்திய கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் கிராமம், ராஜபாளையம் மெயின் ரோட்டியில் குடியிருந்து வருபவர் பாண்டிமீனா (24). இவருக்கும் மம்சாபுரம், காளியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பொன்ராஜ் (33) என்பவருக்கும் 8.5.11-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 51 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் வரதட்சிணையாக கொடுக்கப்படுள்ளது. சில மாதங்களில் பாண்டிமீனாவின் தந்தை இறந்துவிட்டார்.
இதனால் அவரின் ரூ.18 லட்சம் மதிப்புள்ள குடும்பச் சொத்து பாண்டிமீனாவிற்கு வந்துள்ளது.அதை பொன்ராஜ் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்று அவரது தந்தை கோ.பாலகிருஷ்ணன், இவரது மனைவி மனோன்மணி (50), மகள்கள் தங்கசாந்தி (31), சுப்புலட்சுமி (23) ஆகியோரின் தூண்டுதலின் பேரில் பொன்ராஜ், தனது மனைவியிடம் கேட்டு துன்புறுத்தி வந்தாராம்.
இது குறித்து பாண்டிமீனா, நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பேரில் பொன்ராஜ், அவரது தந்தை பாலகிருஷ்ணன், தாய் மனோன்மணி, சகோதரிகள் தங்கசாந்தி, சுப்புலட்சுமி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்