முகப்பு
தற்போதைய செய்திகள்

கணினி பயிற்சி மையத்திற்குச் சென்ற இளம் பெண் மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கணினி பயிற்சி மையத்திற்குச் சென்ற இளம் பெண்ணைக் காணவில்லை என அவரது தாய் போலீஸில் இன்று புகார் செய்துள்ளார்.

தற்போதைய செய்திகள்

கணினி பயிற்சி மையத்திற்குச் சென்ற இளம் பெண் மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கணினி பயிற்சி மையத்திற்குச் சென்ற இளம் பெண்ணைக் காணவில்லை என அவரது தாய் போலீஸில் இன்று புகார் செய்துள்ளார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:54 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் கணினி பயிற்சி மையத்திற்குச் சென்ற இளம் பெண்ணைக் காணவில்லை என அவரது தாய் போலீஸில் இன்று புகார் செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல், பழைய வெள்ளையாபுரம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ராமலட்சுமி (38). இவர்களது மகள் நாகமணி (19). இவர் சிவகாசியில் உள்ள காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதே கல்லூரியில் ஸ்ரீவில்லிபுத்தூர், டி.மானகசேரியைச் சேர்ந்த சேது மகன் சுந்தரபாண்டியன் என்பவரும் படித்து வந்துள்ளார். நாகமணியும் சுந்தரபாண்டியனும் ஒருவரை ஒரு விரும்பியுள்ளனர். இதனால் படிப்பை இடையில் விட்டுவிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

டி.மானகசேரியில் நாகமணியும், சுந்தரபாண்டியனும் குடியிருந்து வந்துள்ளனர். இங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஐ.டி.சி. கணினி மையத்திற்கு கடந்த 5 நாட்களாக சென்று நாகமணி கணினி படித்து வந்துள்ளார். திங்கள்கிழமை வீட்டில் இருந்து கணினி பயிற்சி மையத்திற்குச் சென்ற நாகமணி இன்று வரை வீடு திரும்பவில்லையாம். இது குறித்து நாகமணியின் தாய் ராமலட்சுமி, மல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சார்பு ஆய்வாளர் கீதா வழக்குப் பதிவு செய்து காணாமல் போன நாகமணியை தேடி வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →