முகப்பு
தற்போதைய செய்திகள்

சத்துமாத்திரை சாப்பிட்ட மாணவிகள் 30 பேர் வாந்தி மயக்கம்: சாத்தூரில் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகே படந்தாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்து மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டன.

Updated On : 13 டிசம்பர், 2012 at 1:20 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:24 AM

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகே படந்தாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்து மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டன.

இந்த சத்து மாத்திரைகளைச் சாப்பிட்ட 30 மாணவிகள் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் உடனே சாத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, பெற்றோர்கள் அதிக அளவில் பள்ளிக்குத் திரண்டு வந்து முற்றுகையிட்டுள்ளனர். அரசு உயரதிகாரிகள் உடனே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் கூறி, விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.