முகப்பு
தற்போதைய செய்திகள்

கிரானைட் முறைகேடு : பி. பழனிச்சாமிக்கு ஜாமீன்

கிரானைட் முறைகேட்டு வழக்கில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி. பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 15 வழக்குகளில் ஜாமீன் வழங்கியுள்ளது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:54 PM
பகிர்:

கிரானைட் முறைகேட்டு வழக்கில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி. பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 15 வழக்குகளில் ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலூரில் பிஆர்பி கிரானைட் நிறுவனத்தை நடத்தி வந்த பி. பழனிச்சாமி, அவரது மகன்கள், மனைவி, மற்றும் உறவினர்கள் அரசுப் புறம்போக்கு நிலங்கள், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கண்மாய்கள், கனிம வளத்துறைக்கு சொந்தமான மலைகளிலும் ஏராளமான கிரானைட்  கற்களை சட்டவிரோதமாக வெட்டித் திருடிக் கடத்தியதாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிரானைட் முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தலைமையிலான 18 ஆய்வுக் குழுக்கள் ஆய்வு மேற்கொண்டது. இந்நிறுவனம் பல்வேறு வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டிருப்பதும், இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இந்த வழக்குகளில் பழனிச்சாமி மட்டும் போலிஸாரிடம் சரணடைந்தார். மற்றவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். அவரை போலிஸார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட 15 வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்களை கீழ் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து விட்டன. இந்நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த சி.டி. செல்வம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று அளித்துள்ள தீர்ப்பில், 15 மனுக்களையும் ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்கி அவரது பாஸ்போர்ட்டை கீழமை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும், சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் தினசரி காலை ஆஜராகி, விசாரணைக்கும் ஒத்துழைத்து கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

கிரானைட் முறைகேட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிபந்தனையுடன் முன் ஜாமின் பெற்ற அழகிரி மகன் துரை தயாநிதி மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இவர் கிழவளவு காவல் நிலையத்தில் சனிக்கிழமை 10 மணிக்கு கையெழுத்திட்டார். கிழவளவு பொக்கிஷ மலையில் தமிழ்நாடு கனிமவள நிறுவனத்திற்கு சொந்தமான குவாரியில் கிரானைட் கற்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இவர் முன்பு பங்குதாரராக இருந்த ஒபிம்பஸ் கிரைனைட் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →