சிதம்பரத்தில் மணல் டிராக்டர் மோதி பள்ளி மாணவர் சாவு
சிதம்பரத்தில் வியாழக்கிழமை காலை மணல் டிராக்டர் மோதிய விபத்தில் சைக்கிளில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
சிதம்பரத்தில் வியாழக்கிழமை காலை மணல் டிராக்டர் மோதிய விபத்தில் சைக்கிளில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
சிதம்பரம் ராஜாநகரைச் சேர்ந்த சித்தார்த்தன். சிங்கப்பூரில் பணியாற்றும் இவரது மகன் மணிகண்டன் (14) தாயாருடன் வசித்து வருகிறார். தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் இம்மாணவர் வியாழக்கிழமை காலை சைக்கிளில் சீர்காழி மெயின்ரோட்டில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது விபீஷணபுரம் எனுமிடத்தில் பின்புறமாக சிதம்பரம் நோக்கி வந்த மணல் டிராக்டர் ஒன்று மோதிய விபத்தில் டிரெய்லர் சக்கரத்தில் சிக்கி மாணவர் மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.