சிதம்பரத்தில் வீடுபுகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரொக்கம் திருட்டு
சிதம்பரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி, ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றார்.
சிதம்பரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி, ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றார்.
சிதம்பரம் அருகே உள்ள ஆசிரியர் நகரில் வசிப்பவர் வெங்கடசுப்பிரமணியன் (55). சீர்காழி இந்தியன் வங்கி உதவி மேலாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி சாந்தா வல்லத்துறை பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். வெங்கட சுப்பிரமணியன் புதன்கிழமை காலை வீட்டின் தோட்டத்தில் துணி துவைக்கச் சென்றார். மனைவி சாந்தா குளியளறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்புறம் வழியாக மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து பீரோவிலிருந்த 10 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.6ஆயிரம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.