சிதம்பரம் பகுதியில் அதிவேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: இருவர் பலி
சிதம்பரம் நகராட்சி 10-வது வார்டில் சின்னகாஜியார்தெருவைச் சேர்ந்த சேகர் (45). இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில்
சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலில் சிதம்பரத்தைச் சேர்ந்த ஒருவரும், காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இறந்தனர். பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிதம்பரம் நகராட்சி 10-வது வார்டில் சின்னகாஜியார்தெருவைச் சேர்ந்த சேகர் (45). இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு காய்ச்சல் நோய் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் ரத்தபரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் நோய் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இநநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை இறந்தார்.
இதேபோன்று காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள திருநாரையூர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள் (35). அவர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் மற்றும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெள்ளையம்மாள் வெள்ளிக்கிழமை காலை இறந்தார்.சிதம்பரம் நகரில் ஜவகர்தெருவைச் சேர்ந்த பூங்கோதை (50), சின்னகாஜியார்தெருவைச் சேர்ந்த சோழராஜன் (29) ஆகிய இருவரும் டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் சின்னசெட்டித்தெருவைச் சேர்ந்த சரவணன் (35), எம்.ஐ.நகரைச் சேர்ந்த அப்ரோஜா (35) ஆகிய இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
சிதம்பரம் நகரில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டினால் டெங்கு காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. என மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் போர்க்கால் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.