விருதுநகர் அருகே லாரி விபத்து : 3 பேர் பலி
விருதுநகர் அருகே லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:38 AM
விருதுநகர் அருகே லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.
திருநெல்வேலி மகேந்திரகிரியில் உள்ள காற்றாலைக்கு உதிரிப் பாகங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று காரியப்பாட்டி அருகே வந்த போது பழுதாகி நின்றது. அந்த லாரியில், காற்றாலைக்குத் தேவையான மிகப்பெரிய இறக்கைகள் உள்ளிட்டவை இருந்தன.
கரூரில் இருந்து வெள்ளைக் கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று அவ்வழியே வந்தது. அப்போது, நின்றிருந்த லாரியை கடக்க முயன்ற போது, அந்த லாரியில் இருந்த இறக்கைகள் இடித்து விபத்துக்குள்ளானது. இதில், கற்களை ஏற்றி வந்த லாரியின் கிளீனர் உட்பட 3 பேர் பலியானார்கள். லாரி ஓட்டுநர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement