வேடசந்தூர் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது
திண்டுக்கல், ஜூலை 8: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி நடந்தது. அதிகாலை சுமார்
திண்டுக்கல், ஜூலை 8: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி நடந்தது.
அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் ஒரு காரில் வந்த 3 பேர், வெல்டிங் மிஷின் கொண்டு, வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து, உள்ளே புக முயன்றனர். அப்போது, அங்கே திரண்ட பொதுமக்கள், கொள்ளையர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு போலீஸாருக்கு தகவல் தந்தனர்.
இதை அடுத்து, அவர்களிடம் திண்டுக்கல்லைச் சேர்ந்த இருவர் பிடிபட்டனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். போலீஸார் வழக்கு பதிந்து, தப்பியோடியவரைத் தேடி வருகின்றனர்.
Advertisement