முகப்பு
தற்போதைய செய்திகள்

சங்மாவுக்கு செ.கு.தமிழரசன் ஆதரவு

சென்னை, ஜூலை 18: இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக பாஜக சார்பில் நிறுப்பட்டுள்ள பி.ஏ.சங்மாவுக்கு, இந்திய குடியரசுக் கட்சி தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செ.கு.தமிழரசன் ஆதரவு தெரிவித்துள்

Updated On : 19 செப்டம்பர், 2012 at 10:58 PM
பகிர்:
சென்னை, ஜூலை 18: இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக பாஜக சார்பில் நிறுப்பட்டுள்ள பி.ஏ.சங்மாவுக்கு, இந்திய குடியரசுக் கட்சி தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செ.கு.தமிழரசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ஜெயலலிதாவால் முன் நிறுத்தப்பட்டுள்ள பி.ஏ.சங்மாவை ஆதரித்து வாக்களிப்போம்.
65 ஆண்டு கால சுந்திர இந்தியாவில் சுமார் 8 சதவீதத்துக்கு மேல் உள்ள மலைவாழ் மக்கள் மிகப் பெரும் அளவில் சமூக ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்ட வந்திருக்கின்றனர். 
அந்த சமுதாயத்தில் இருந்து வந்து, மக்களவைத் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டவர் சங்மா. தொடக்க நிலையிலேயே சங்மாவை தங்களின் வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்து ஆதரவளித்திருப்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தரப்பட்டிருக்கும் மிகப் பெரிய அங்கீகாரத்துக்கான சான்றாகும்.
எனவே சமூக நீதியில் அக்கறை கொண்ட எவரும் இந்த நல்ல முயற்சியை ஆதரித்து மகிழ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.