சேலம் நெய்க்காரப்பட்டியில் பதற்றம் : போலிஸ் குவிப்பு
சேலம், ஜூலை 19 : சேலத்தை அடுத்த நெய்க்காரப்பட்டியில் மூங்கில்கொத்து முனியப்பன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதம் ஆடி மாத திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆடி மாத திருவிழா துவங்கியத
தற்போதைய செய்திகள்சேலம் நெய்க்காரப்பட்டியில் பதற்றம் : போலிஸ் குவிப்பு
சேலம், ஜூலை 19 : சேலத்தை அடுத்த நெய்க்காரப்பட்டியில் மூங்கில்கொத்து முனியப்பன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதம் ஆடி மாத திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆடி மாத திருவிழா துவங்கியத
சேலம், ஜூலை 19 : சேலத்தை அடுத்த நெய்க்காரப்பட்டியில் மூங்கில்கொத்து முனியப்பன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதம் ஆடி மாத திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆடி மாத திருவிழா துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எருதாட்டம் நடத்தப்படும். இந்நிகழ்ச்சிக்கு அவ்வூர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஜல்லிக்கட்டு மற்றும் எருதாட்டம் நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதை காரணம் காட்டி எருதாட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் வாகனங்கள் செல்ல இயலாத வண்ணம் கற்களை வைக்க பொதுமக்கள் முயன்ற போது அவர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு எருதாட்டம் நடத்த கிராமத்தினர் திட்டமிட்டுள்ளனர். தடையை மீறி அவர்கள் எருதாட்டம் நடத்துவதைத் தடுக்க ஏராளமான போலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.