முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை அருகே ஆம்புலன்ஸ்-லாரி மோதல்: ஒருவர் பலி

மதுரை, ஜூலை 19: மதுரை அருகே திருச்சி சாலையில் ஆம்புலன்ஸுடன் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மதுரை அரசு பொதுமருத்துவமனையில் இருந்து கொட்டாம்பட்டிக்கு ஒரு பிரசவ கேஸ் தொடர்பாக சென்ற ஆம்புலன்ஸ், சி

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

மதுரை, ஜூலை 19: மதுரை அருகே திருச்சி சாலையில் ஆம்புலன்ஸுடன் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

மதுரை அரசு பொதுமருத்துவமனையில் இருந்து கொட்டாம்பட்டிக்கு ஒரு பிரசவ கேஸ் தொடர்பாக சென்ற ஆம்புலன்ஸ், சிகிச்சை பெற்றவரை இறக்கிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் கருங்காலக்குடி அருகே 4 வழிச்சாலையில் வந்தபோது, லாரி ஒன்று குறுக்கே பாய்ந்ததில் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், ஆம்புலன்ஸில் இருந்த மிடி டெக்னீஷியன் சரவணன் (34) சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →