மதுரை, ஜூலை 22: மதுரையில் காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏவின் சகோதரர் நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை மேற்கு தொகுதி காங்கிரஸின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜேந்திரன்,. இவரது சகோதரர் கணேசன்(வயது 39). இவர் வட்டிக்கு பணம் விடும் தொழிலைச் செய்து வந்தார்.
நேற்று இரவு படுக்கச் சென்றவர் இன்று காலை வெகு நேரமாகியும் கதவைத் திறக்காததால், சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே பார்த்தனர். அப்போது அவர் சுடிதார் துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை அடுத்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
தற்கொலை செய்துகொண்ட கணேசனுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் மேயர் ராஜன் செல்லப்பாவின் உறவினரும் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.