பாமாயில் இறக்கும்போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி
நாகப்பட்டினம், ஜூலை 23: நாகப்பட்டினம் துறைமுகத்தில் மலேசியாவில் இருந்து வந்த கப்பலிலிருந்து பாமாயில் இறக்கும் பணி நடந்தது. பாமாயில் இறக்கும் பணியில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டிருந்த
நாகப்பட்டினம், ஜூலை 23: நாகப்பட்டினம் துறைமுகத்தில் மலேசியாவில் இருந்து வந்த கப்பலிலிருந்து பாமாயில் இறக்கும் பணி நடந்தது.
பாமாயில் இறக்கும் பணியில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கப்பலில் இருந்து சிறு கண்டெய்னர்களில் சேகரித்து பின்னர் உள்ளே கொண்டுவரப்படும். பாமாயில் இறக்கிய ஒரு மணி நேரம் கழித்துதான், தொட்டிகளில் இறங்கி அவற்றை மேலேற்ற வேண்டுமாம். ஆனால் பாமாயில் சேகரிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே நேற்று நள்ளிரவில் தொட்டிக்குள் இறங்கிய ஆல்பர்ட், வெங்கடேசன், வேலவன் ஆகிய மூவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்துவிட்டனர். இவர்கள் மூவரும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். மூவரும் சென்று வெகுநேரம் ஆகிவிட்டதால் அவர்களைத் தேடி உள்ளே சென்ற சைமன், பன்னீர்செல்வம், மாசிலாமணி, ரமேஷ் ஆகிய நால்வரும் மயக்கம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.