முகப்பு
தற்போதைய செய்திகள்

சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியதாக வழக்கு தள்ளுபடி : பாமகவினர் விடுதலை

சேலம், ஜூலை 27 : சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் சுங்கச்சுவாடி ஊழியரை தாக்கியதாகக் கூறப்பட்ட  வழக்கில் முன்னாள் எம்எல்ஏ விடுதலை செய்யப்பட்டார். சேலம் -தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பல்கலைக் க

தற்போதைய செய்திகள்

சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியதாக வழக்கு தள்ளுபடி : பாமகவினர் விடுதலை

சேலம், ஜூலை 27 : சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் சுங்கச்சுவாடி ஊழியரை தாக்கியதாகக் கூறப்பட்ட  வழக்கில் முன்னாள் எம்எல்ஏ விடுதலை செய்யப்பட்டார். சேலம் -தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பல்கலைக் க

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:16 PM
பகிர்:

சேலம், ஜூலை 27 : சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் சுங்கச்சுவாடி ஊழியரை தாக்கியதாகக் கூறப்பட்ட  வழக்கில் முன்னாள் எம்எல்ஏ விடுதலை செய்யப்பட்டார்.

சேலம் -தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பல்கலைக் கழகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பாமகவினர் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், 30.8.2009 அன்று பாமகவினர் அந்த சுங்கச்சாவடியை கடக்கும் போது சுங்கம் கொடுத்தால் தான் கேட் திறக்கப்படும் என்று சுங்கச்சாடி ஊழியர்கள் கூறினர். ஆனால் இது எங்கள் ஊர், சுங்கக் கட்டணம் செலுத்த முடியாது என்று பாமகவினர் கூறியதை அடுத்து அவ்விடத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர் பாலமுருகன் என்பவர், ஓமலூர் முன்னாள் எம்எல்ஏ தமிழரசு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்தார். வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 25.6.2011 அன்று தமிழரசு உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று சேலம் மாவட்டம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், மனுதாரரின் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவை நீதிபதி பாஸ்கரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து தமிழரசு உள்ளிட்ட நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →