முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை : மேலும் ஒருவர் சரண்

ஜுன் 8 : கடந்த மே 14ம் தேதி கே.புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் வன்னிக்கொண்டம் கண்மாயில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை கிருஷ்ணங்கோயில் போலிசார் விசாரித்து வந்தனர்.  மே 15ம் தேத

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:37 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:10 PM

ஜுன் 8 : கடந்த மே 14ம் தேதி கே.புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் வன்னிக்கொண்டம் கண்மாயில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை கிருஷ்ணங்கோயில் போலிசார் விசாரித்து வந்தனர்.  மே 15ம் தேதி கொலையில் தொடர்புள்ள கருப்பசாமி, கோபால் இருவரும் சரண் அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று ஜே.எம். 2 நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் முருகன் முன்னிலையில் கே. புதூரைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சுந்தர் (26) சரணடைந்தார். சுந்தரை விசாரித்த நீதிபதி, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து சுந்தர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.