தற்போதைய செய்திகள்

ராமநாதபுரம் அருகே கார் விபத்து: 4 பேர் பலி

ராமநாதபுரம், ஜூன்.10: கரூர் மாவட்டம் ஒன்றுபுரத்தைச் சேர்ந்த தனசேகரன்(38), மோகன்ராஜ்(33) ஆகியோர் தங்களது தந்தை இறந்து ஒரு வருடம் ஆனதால் அவருக்கு திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரத்துக்கு காரில் குடும்பத்துடன

சி.வ.சு. ஜெகஜோதி

ராமநாதபுரம், ஜூன்.10: கரூர் மாவட்டம் ஒன்றுபுரத்தைச் சேர்ந்த தனசேகரன்(38), மோகன்ராஜ்(33) ஆகியோர் தங்களது தந்தை இறந்து ஒரு வருடம் ஆனதால் அவருக்கு திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரத்துக்கு காரில் குடும்பத்துடன் வந்தனர். திதி கொடுத்துவிட்டு திரும்பிச் செல்லும்போது தெளிச்சாத்த நல்லூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென மரத்தின் மீது மோதியது. இதில் தனசேகரின் மனைவி பரிமளா(35), மோகன்ராஜின் மனைவி பாக்கியலட்சுமி(30), அவர்களின் தாயார் ராணி(60), உறவினர் நவாப் என்ற நாராயணன்(15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் தனசேகர், மோகன்ராஜ், குழந்தைகள் சுபி(18), ரியா(2), கார் டிரைவர் சந்தோஷ்(38) ஆகியோர் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT