திருவாரூரில் எண்ணெய் குழாயில் தீ : மூங்கில் காடுகள் சேதம்
திருவாரூர், ஜுன் 18 : திருவாரூர் அருகே வெள்ளக்குடி என்ற இடத்தில் ஓஎன்ஜிசியின் இயற்கை எரிவாயு சேமிப்பு நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. இந்த கிடங்குக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்கை எரிவாயு ஆழ்துறை கு
திருவாரூர், ஜுன் 18 : திருவாரூர் அருகே வெள்ளக்குடி என்ற இடத்தில் ஓஎன்ஜிசியின் இயற்கை எரிவாயு சேமிப்பு நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. இந்த கிடங்குக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்கை எரிவாயு ஆழ்துறை குழாய்கள் மூலமாகக் கொண்டு வரப்படும். இன்று வெள்ளடிக்குடியில் அய்யனார் கோயில் அருகே உள்ள குழாயில் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனால் அருகில் இருந்த மூங்கில் காடுகளும் தீ பரவியது. உடனடியாக தகவல் அறிந்து திருவாரூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் சுமார் 2 அடி ஆழத்தில் குழாய் அமைக்கப்பட்டிருப்பதும், குழாய் உள்ள பல இடங்களில் குழித் தோண்டி எண்ணெய் எடுப்பதாகவும், அப்பகுதி திறந்தே இருப்பதால் தீ விபத்து நேரிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், தீ விபத்தினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அங்குள்ள பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.