முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூர் அருகே கிணற்றில் விழுந்து மாணவர் பலி

சாத்தூர், ஜூன் 23: சாத்தூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் பலியானார். சாத்தூர் அருகே கண்மாய்சூரன்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 13) தனது நண்பர்கள் 4 பேருடன் நாரணாபுரம் பகுதி கிணற்றுக்கு

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:52 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:20 PM

சாத்தூர், ஜூன் 23: சாத்தூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் பலியானார்.

சாத்தூர் அருகே கண்மாய்சூரன்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 13) தனது நண்பர்கள் 4 பேருடன் நாரணாபுரம் பகுதி கிணற்றுக்கு குளிக்கச் சென்றனர். இதில் 4 பேருமே கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அவர்களைக் காக்க விரைந்தனர். இந்த 4 பேரில் 3 பேரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். மாரிச்செல்வம் மட்டும் உயிரிழந்தார். இது குறித்து தாசில்தார் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.