சேலம் அருகே டெட்டனேட்டர்கள் வெடித்து இருவர் படுகாயம்
சேலம், ஜூன் 23 : சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கருத்தானூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (70), இவரது மகன் பெரியசாமி (35). இவர்கள் கிணறு வெட்டும் கூலித் தொழிலாளிகளாவர். தாராமங்கலம் அருகே மாட்டையாம்ப
தற்போதைய செய்திகள்சேலம் அருகே டெட்டனேட்டர்கள் வெடித்து இருவர் படுகாயம்
சேலம், ஜூன் 23 : சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கருத்தானூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (70), இவரது மகன் பெரியசாமி (35). இவர்கள் கிணறு வெட்டும் கூலித் தொழிலாளிகளாவர். தாராமங்கலம் அருகே மாட்டையாம்ப
சேலம், ஜூன் 23 : சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கருத்தானூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (70), இவரது மகன் பெரியசாமி (35). இவர்கள் கிணறு வெட்டும் கூலித் தொழிலாளிகளாவர்.
தாராமங்கலம் அருகே மாட்டையாம்பட்டி கிராமத்தில் கிணறு வெட்டும் பணியில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். கிணறு தோண்டும் பகுதிக்கு அருகே உள்ள மோட்டார் பம்பு செட்டில் டெட்டனேட்டர்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை மோட்டார் இயக்கப்படும் போது மின் கசிவு ஏற்பட்டு டெட்டனேட்டர்கள் அனைத்தும் வெடித்துச் சிதறின. அருகில் இருந்த ராமசாமியின் கால் சிதைந்துபோனது. பெரியசாமிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் மோட்டார் அறை சேதமடைந்தது
காயமடைந்த இருவரும் கவலைக்கிடமான நிலையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.