முகப்பு
தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சி பிடிஓ பதவியிறக்கம் : கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, ஜூன் 29 : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த (பிடிஓ) அல்லாபிச்சை, உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் முடிவுகளை காலதாமதமாக வெளியிட்டதால் வியாழக்கிழமையன்று அவரை பதவியி

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:54 PM
பகிர்:

பொள்ளாச்சி, ஜூன் 29 : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த (பிடிஓ) அல்லாபிச்சை, உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் முடிவுகளை காலதாமதமாக வெளியிட்டதால் வியாழக்கிழமையன்று அவரை பதவியிறக்கம் செய்யப்பட்டார். இவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) சூளுர் ஒன்றியத்துக்கு மாற்றப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கோவையில் உள்ள 12 யூனியன்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.