காலம் தாழ்த்தாமல் நீதியைப் பெற்றுத் தர வேண்டும் : தலைமை நீதிபதி
நீதிமன்ற புறக்கணிப்பால் நீதிபதிகள் யாரும் பாதிக்கப்படப்போவதில்லை. பாதிக்கப்போடப் போவது என்னவோ பொதுமக்கள்தான்..
தற்போதைய செய்திகள்காலம் தாழ்த்தாமல் நீதியைப் பெற்றுத் தர வேண்டும் : தலைமை நீதிபதி
நீதிமன்ற புறக்கணிப்பால் நீதிபதிகள் யாரும் பாதிக்கப்படப்போவதில்லை. பாதிக்கப்போடப் போவது என்னவோ பொதுமக்கள்தான்..
திருவாரூர், ஜூன் 30 : திருவாரூரில் இன்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, நீதிமன்றங்கள், வழக்குறைஞர்கள், நீதிபதிகள் அனைவரும் தங்களப் பணியை செய்ய வேண்டியது அவர்களது கடமை. இதற்காக அவர்களை யாரும் பாராட்டத் தேவையில்லை. பொதுவாக அரசுகள் நீதித் துறையை கண்டு கொள்வதில்லை. ஆனால் தமிழக அரசு அவ்வாறு இல்லாமல், நீதித் துறைக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்கிறது. அரசு அலுவலர்களின் சில செயல்கள் அரசுக்கும், நீதித் துறைக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் பேசப்படுகிறது. ச்ட்டம் படித்தவர்கள் வழக்குறைஞர்களாக பணியாற்ற பொறுப்பேற்கும் முன்பு, தங்களிடம் வரும் வாதிகளுக்கு உண்மையாக இருப்போம் என்று உறுதிமொழி கூறி பதவியேற்கிறார்கள்.
ஏதோ காரணங்களுக்காக நீதிமன்ற புறக்கணிப்பு செய்யத் துவங்கும் போதே உறுதி மொழியை மீறிவிடுகிறார்கள். இதை வழக்குறைஞர்கள் கட்டுப்படுத்த வேண்டும். நீதிமன்ற புறக்கணிப்பால் நீதிபதிகள் யாரும் பாதிக்கப்படப்போவதில்லை. அவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் எவ்வித பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை. பாதிக்கப்போடப் போவது என்னவோ வழக்குறைஞர்களும், பொதுமக்களும்தான். எனவே, வழக்குறைஞர்கள் சிறப்பாக வழக்குகளை நடத்தி காலம் தாழ்த்தாமல் நீதியை பெற்றுத் தர வேண்டும் என்றார் நீதிபதி எம்.ஒய். இக்பால்.
நிகழ்ச்சியில். மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, செல்வம், ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.