முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்

நாகப்பட்டினம், மார்ச் 25: நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 20 ம் தேதி நாகப்பட்டினம் அக்கரப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் ஒரு படகில் மீன

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

நாகப்பட்டினம், மார்ச் 25: நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த 20 ம் தேதி நாகப்பட்டினம் அக்கரப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் ஒரு படகில் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். அப்போது இலங்கைக் கடற்படையினர் அவர்கள் வந்த படகை சேதப்படுத்தி, மீன்பிடி வலைகள், திசை காட்டும் ஜிபிஎஸ் கருவி, மீன்வளத்தைக் காட்டும் கருவிகளை பறித்துக் கொண்டு சென்றார்களாம். இந்தத் தாக்குதல் 23ம் தேதி நடந்ததாகவும், தாங்கள் வழி தெரியாமல் தத்தளித்து இன்று ஒருவழியாக நாகப்பட்டினம் கடற்கரைக்கு வந்ததாகவும் தப்பி வந்த மீனவர்கள் கூறினர்.

முழு கட்டுரையைப் படிக்க →