ராமநாதபுரம், மே.1: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஊராட்சி ஒன்றியம் களிமண் குன்று கிராமம் வைரவன் என்பவர் ஏப்ரல் 24-ம் தேதி வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது ஐம்பொன்னாலான பெருமாள் சிலை ஒன்று கிடைத்தது. இதை அவர் யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். இந்த நிலையில் அவருடன் அஸ்திவாரம் தோண்டிய செல்லப்பா என்பவருக்கு திடீரென அம்மை போட்டுள்ளது.
இதனால் அவர் பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து விஏஓ பாலையாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததன்பேரில்
வட்டாட்சியர் அன்புநாதன், துணை வட்டாட்சியர் தமீம், வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சிலையை மீட்டு தொல்பொருள் துறையிடம் ஒப்படைத்தனர்.
ஒன்றரை அடி உயரமுள்ள அந்த சிலையின் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.