முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூர் ஓட்டலில் சிலிண்டர் வெடித்து விபத்து : 3 பேர் பலி

சாத்தூர், மே, 4 : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்கியச் சாலையில் இயங்கி வந்த மீனாட்சி பவன் என்ற ஹோட்டலில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் ப

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:36 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:43 PM

சாத்தூர், மே, 4 : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்கியச் சாலையில் இயங்கி வந்த மீனாட்சி பவன் என்ற ஹோட்டலில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலியாயினர். 3பேர்  படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புப் படையினர் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஹோட்டலில் இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மதுரை, சாத்தூர் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ தற்போது முழுமையாக அணைக்கப்பட்டு, ஜேசிபி வாகனத்தைக் கொண்டு இடிபாடுகளை அகற்றி, வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தேடும் பணி நடந்து வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.