பரிசு விழுந்திருப்பதாக தொலைபேசியில் கூறி பண மோசடி: போலீஸார் எச்சரிக்கை
திருப்பூர், மே 6: திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பரிசு விழுந்திருப்பதாக தொலைபேசியில் கூறி இருவரிடம் இருந்து பணம் பறித்த மோசடி நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற மோசடி அழைப்புகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண
திருப்பூர், மே 6: திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பரிசு விழுந்திருப்பதாக தொலைபேசியில் கூறி இருவரிடம் இருந்து பணம் பறித்த மோசடி நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற மோசடி அழைப்புகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் சரகத்தை சேர்ந்த பருக்கான், ஆனந்த் ஆகியோருக்கு 923068807177 மற்றும் 92308810900 என்ற தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பு வந்தது. உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு லட்சம் பரிசு விழுந்திருப்பதாகவும், அதனை பெற்றுக்கொள்ள குமார்திரிபாதி என்பவரின் எஸ்.பி.ஐ வங்கி கணக்கு எண் 318573447755 ல் ரூ 18 ஆயிரம் பணம் உடனடியாக செலுத்தவேண்டும் என தெரிவித்தனர்.
அதை நம்பிய இருவரும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினர். அதே நபர் மீண்டும் தொடர்புகொண்டு டிஸ் டிவி கணக்கில் ரீசார்ஜ் செய்ய ரூ 1000 செலுத்தவேண்டுமென தெரிவித்தனர், அதையும் இருவரும் செலுத்தியுள்ளனர். ஆனால் பரிசு கிடைக்கவில்லை என்பதால் இருவரும் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
விசாரணையில் மேற்கண்ட 2 தொலைபேசி எண்களும் பாகிஸ்தானை சேர்ந்த எண்கள் என்பது தெரியவந்துள்ளது. இது மாதிரியான ஏமாற்று கும்பல் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற வெளிநாடுகளில் இருந்து மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி மற்றும் அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டால் அதனை நம்பவேண்டாம்.
அதுமாதிரியான அழைப்பு வந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது போன்ற குற்றவாளிகள் பாகிஸ்தான், நைஜிரியா போன்ற நாடுகளில் கண்டுபிடிக்க முடியாத இடங்களில் இருக்கும், அவர்களிடம் இருந்து கொண்டு இழந்த பணத்தை மீட்பது என்பது மிக சவாலான விஷயம்.
குற்றவாளிகளை பிடிக்க இன்டர்போல் போன்ற சர்வதேச போலீஸ் அமைப்புகள் மூலம் உதவியை நாட வேண்டும். ஆகவே பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்த பணத்தை கயவர்கள் கைகளில் எளிதாக சேர்வதற்கு உதவி செய்ய கூடாது.