முகப்பு
தற்போதைய செய்திகள்

ராமநாதபுரம் இளைஞர் சவூதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

ராமநாதபுரம், மே.9: ராமநாதபுரம் இளைஞர் ஒருவர் சவூதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்வரூதின்(33) என்பவர் ரியாதில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்த்ராஸில் ஒரு பெட்ரோல் பங்கில் வே

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:41 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:47 PM

ராமநாதபுரம், மே.9: ராமநாதபுரம் இளைஞர் ஒருவர் சவூதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்வரூதின்(33) என்பவர் ரியாதில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்த்ராஸில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலைசெய்து வந்தார். நேற்று இரவு இவர் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது அரேபியர் ஒருவர் பெட்ரோல் போட வந்துள்ளார். பெட்ரோல் போட்ட பின்னர் சில்லறை கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென அந்த அரேபியர் துப்பாக்கியை எடுத்து அன்வரூதினை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அன்வரூதின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.