ராமநாதபுரம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி டூவீலரில் சென்றவர் பலி
ராமநாதபுரம், மே.23: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலியானார். ராமநாதபுரம் அருகே ரகுநாதபுரம்மேலூரைச் சேர்ந்தவர் கர்ணன்(32). இவர் கார்டிரைவ
ராமநாதபுரம், மே.23: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலியானார்.
ராமநாதபுரம் அருகே ரகுநாதபுரம்மேலூரைச் சேர்ந்தவர் கர்ணன்(32). இவர் கார்டிரைவராக வேலைபார்க்கிறார். இவரது தந்தை பெயர் பாஸ்கரன். இதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் முகுந்தன்(17) பெயின்ட்டராக வேலைபார்க்கிறார். இருவரும் இன்று சங்கந்தியான்வளசை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கர்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முகுந்தன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.