முகப்பு
தற்போதைய செய்திகள்

மேலூரில் டெங்கு பாதித்த பெண் மரணம்

மேலூர் பகுதியில் டெங்கு பாதித்து சிகிச்சை பெற்றுவந்த பெண் இன்று காலை உயிரிழந்தார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

மேலூர் பகுதியில் டெங்கு பாதித்து சிகிச்சை பெற்றுவந்த பெண் இன்று காலை உயிரிழந்தார்.

மேலூர் நகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட பழைய சொக்கம்பட்டியில் வசித்துவருபவர் சிவகுமார். இவரின் மனைவி முத்துலட்சுமி (35) சில நாட்களாக டெங்கு பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் மரணமடைந்தார். 

இந்தப் பகுதியில் டெங்கு பாதிப்பு அதிகம் பாதிக்கப்பட்டபோதும் உடனடி நடவடிக்கை எடுத்து காய்ச்சல் பரவுவது தடுத்து நிறுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலூர் பகுதியில் இங்குதான் முதன்முதலில் டெங்கு பாதிப்பு உணரப்பட்டதாம்.

ஏற்கெனவே இதே பகுதியில் தொட்டிச்சி என்ற பெண்ணும் ரூபிகா (7) என்ற மாணவியும் டெங்கு  பாதிப்பில் உயிரிழந்துள்ளனர். இதே பகுதியில் இது மூன்றாவது பலி. இதுவரை மேலூர் வட்டத்தில் மட்டும் டெங்கு பதிப்பில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →