பரமக்குடி செல்ல நடிகர் கருணாஸுக்கு அனுமதி மறுப்பு
பரமக்குடியில் தேவர் குருபூஜை சென்று திரும்பிய மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று
பரமக்குடியில் தேவர் குருபூஜை சென்று திரும்பிய மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று மௌன ஊர்வலம் மற்றும் இறுதி அஞ்சலி செலுத்தும் ஊர்வலம் நடைபெற இருந்தது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மௌன அஞ்சலி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் கருணாஸ் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்தார்.
மதுரை விமான நிலையம் வந்த அவரை பரமக்குடி செல்லக்கூடாது என்று போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதனால் அவர், மதுரையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளச் சென்றார்.