கடனாநதி அணையில் மூழ்கி வங்கி உதவி மேலாளர் சாவு
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே கடனாநதி அணையில் ஞாயிற்றுக்கிழமை குளித்த வங்கி உதவி மேலாளர் சுப்பிரமணியன் (50) இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேகடனாநதி அணையில் ஞாயிற்றுக்கிழமை குளித்த வங்கி உதவி மேலாளர்சுப்பிரமணியன் (50) இறந்தார்.
தென்காசி கன்னிமாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வகுமார். இவர்தென்காசி கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளராக பணி செய்து வருகிறார்.செங்கோட்டை மேலபிரதான சாலையை சேர்ந்த சுப்பிரமணியன் (50). இவர் இதேவங்கியில் உதவி மேலாளராக பணி செய்து வந்தார். ஆயிரப்பேரியை சேர்ந்தகிருஷ்ணன். வங்கியின் காவலாளி.
செங்கோட்டை இலஞ்சியை சேர்ந்த வியாபார பிரமுகர் விக்னேஷ்வரன். இவரும் வங்கி பணியாளர்களும் நண்பர்கள். ஞாயிற்றுக்கிழம விக்னேஷ்வருக்கு சொந்தமான காரில் செல்வகுமார், சுப்பிரமணியன், விக்னேஷ்வரன், காவலாளி கிருஷ்ணன் ஆகியோர் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனாநதி அணைக்கு சுற்றுலா வந்தனர்.காரை தென்காசி கொட்டாக்குளத்தை சேர்ந்த இசக்கி ஓட்டினாராம்.
அணையில் பளிஞ்சிக்கு செல்லும் வழியில் இவர்கள் குளித்து கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக சுப்பிரமணியன் ஆழமான பகுதியில் சிக்கிகொண்டார். மூச்சு திணறிய அவரை மீட்டு கடையம் தனியார் மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு சுப்பிரமணியன் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆழ்வார்குறிச்சி போலீஸார் சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி அம்பாசமுத்திரம்அரசு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.