பசும்பொன் சென்று திரும்பிய மேலும் 3 பேர் சாவு
பசும்பொன் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியபோது, கார் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசியதில் காயமடைந்த 3 பேர் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
பசும்பொன் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியபோது, கார் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசியதில் காயமடைந்த 3 பேர் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
ஜெயபாண்டி (20), சுந்தரபாண்டி (20), வெற்றிவேல் (19) ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
முன்னதாக, பசும்பொன்னில் அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் மீது பல்வேறு இடங்களில் மர்மக் கும்பல் தாக்குதல் நடத்தியது. மதுரை விரகனூர் சுற்றுச்சாலை பகுதியில் காரில் வந்தவர்கள் மீது மர்மக்கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதில் கார் தீப்பற்றி எரிந்தது. இதில் அதிலிருந்த 20 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.