முகப்பு
தற்போதைய செய்திகள்

குடிநீருக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் திறப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் இருந்து 300 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 30 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:30 PM
பகிர்:

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் இருந்து 300 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 30 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.

நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்ததால் பாபநாசம் அணை மூடப்பட்டது. கடந்த சில தினங்களாக மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனிடையே பாபநாசம் அணையில் இருந்து புதன்கிழமை 300 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் பெருங்கால் மதகில் 30 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

புதன்கிழமை அணைகளின் நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 75.15 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 331.06 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 88.09 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 61.32 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 47 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பெருங்கால் மதகில் 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 74.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 81.50 அடியாகவும் இருந்தது.

9 ம் தேதி அணைகள் திறப்பு?:

பிசான பருவ சாகுபடி பணிகளை தொடங்க அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே பாபநாசம், கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து பாசனத்திற்கு இம்மாதம் 9 ம் தேதி தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →