முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலம் அருகே செவிலியர் பயிற்சி மாணவி மரணம்: பதற்றத்தைத் தணிக்க போலீசார் குவிப்பு

சேலம் அருகே காசநோய் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் பயிற்சி மாணவி மரணமடைந்ததாக இன்று அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கே பதற்றம் எழுந்துள்ளது. பதற்றத்தைத் தணிக்க போலீஸார் முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

சேலம் அருகே காசநோய் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் பயிற்சி மாணவி மரணமடைந்ததாக இன்று அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கே பதற்றம் எழுந்துள்ளது. பதற்றத்தைத் தணிக்க போலீஸார் முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டனர்.

சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 526 மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்காக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இரண்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பாட நேரம் தவிர, இங்கே படிக்கும் மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் பயிற்சியினைப் பெறுவார்கள்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் பி.பள்ளிப்பட்டியை அடுத்த அச்சம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் மகள் நித்யா(21) மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு  அடிக்கடி காய்ச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுமாம். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு காச நோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இருப்பினும் அவரது உடல் நிலை சரியாகவில்லை. இந்நிலையில் அரசு மருத்துவமனையியில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த நேற்று முன் தினமே இறந்துவிட்டதாகத் தெரிந்தது. ஆனால், மாணவிகள் பிரச்னையில் ஈடுபடவே, இன்னும் சிகிச்சையில் இருக்கிறார் என்று மாற்றிச் செல்லப்பட்டதாம் இந்நிலையில், தீபாவளி விடுமுறையை ஒட்டி, மாணவிகள் பலரும் தங்கள் ஊர்களுக்குச் செல்லவே, விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 7மணி அளவில் அவர் இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதை அடுத்து, மருத்துவர்கள், மாணவிகள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாணவியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏற்கெனவே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்  பயிற்சி பயிற்றுனர்கள் ஆகியோரைக் கண்டித்து மாணவிகள் ஆட்சியர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதனால் நர்சிங் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாணவி இறந்ததாக அறிவிக்கப்பட்டதால், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →