அடையாளம் தெரியாத வாகனம் மோதி நீதிமன்ற ஊழியர் மனைவி சாவு
காரைக்காலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி நீதிமன்ற ஊழியரின் மனைவி உயிரிழந்தார்.
காரைக்காலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி நீதிமன்ற ஊழியரின் மனைவி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவது : காரைக்கால் நீதிமன்றத்தில் பணியாற்றுபவர் ஆறுமுகம். இவரது மனைவி பிரேமாவதி (52). இவ்விருவரும் சேர்ந்து தினமும் அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாம். வியாழக்கிழமை காலை பிரேமாவதி மட்டும் தனியாக அதிகாலை நடைபயிற்சிக்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
காரைக்கால் தெய்தாவீதி, காமராஜர் சாலை சந்திப்பு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. படுகாயத்துடன் அருகிலிருந்த சாக்கடையோரத்தில் அவர் தூக்கியெறியப்பட்டு கிடந்தார். அப்பகுதியினர் விரைந்து சென்று அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் நிலையில் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய வாகனத்தை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.