முகப்பு
தற்போதைய செய்திகள்

பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணைத் திறப்பு

பாபநாசம் அணையில் இருந்து வியாழக்கிழமை பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 11...

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

பாபநாசம் அணையில் இருந்து வியாழக்கிழமை பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 11 கால்வாய்கள் மூலம் 86,107 ஏக்கர் நிலங்கள்
பாசன வசதி பெறும் என அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில்
உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக
உயர்ந்தது. முதல் கட்டமாக கடனாநதி, ராமநதி அணைகள் மூலம் பாசனம் பெறும்
நிலங்களுக்கு இம்மாதம் 9 ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனிடையே பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவி்ட்டார். பாபநாசம் அணையின் நீர்மட்டம் 77.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 283.80 கனஅடி நீர்வரத்து இருந்தது.

அதன்படி வியாழக்கிழமை பாபநாசம் அணையில் இருந்து மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ், மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர். முருகையாபாண்டியன் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் அளித்தப் பேட்டி: திருநெல்வேலி, தூத்துக்குடி
மாவட்டங்களில் 11 கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் 86,107 ஏக்கர்
நிலங்களுக்கு பிசான சாகுபடிக்காக முதல்வர் ஜெயலலிதா தண்ணீர் திறக்க
உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாபநாசம் அணையில் இருந்து தாமிரவருணி
பாசனத்திற்கு பிசான சாகுபடி பணிகளை தொடங்க 600 கனஅடி தண்ணீர்
திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு வருகிற 31.03.2013 ம் தேதி வரை 137
நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும்.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு கோடை
மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன்
கால்வாய், பாளையம்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் ஆகிய 7 கால்வாய்கள்
மூலம் 40,000 ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால்வாய், கீழக்கால்வாய், தெற்கு பிரதான கால்வாய், வடக்கு பிரதானக் கால்வாய் ஆகிய 4 கால்வாய்கள் மூலம் 46,107 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும். தேவையை பொறுத்து விவசாயத்திற்கு கூடுதலாகதண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெகநாதன்,
தாமிரவருணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் முத்துபாண்டியன், அணை
செயற்பொறியாளர் ஜார்ஜ்செல்வமணி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர்
ரோஹ்னிராம்தாஸ், இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ, திருநெல்வேலி மேயர்
விஜிலாசத்யானந்த், உதவி செயற்பொறியாளர்கள் தமிழ்செல்வன், மதனசுதாகரன்,
மாணிக்கவாசகம், பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் ராமையா,

தூத்துக்குடி துணை மேயர் சேவியர், நகராட்சித் தலைவி இ. மனோன்மணி,
நகராட்சி துணைத் தலைவர்கள் டி. கணேசபெருமாள், ரா. மாரிமுத்து, தாமிரவருணி திட்டக்குழு தலைவர் டி. உதயசூரியன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ப. முத்துகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர்கள் வி. சிவன்பாபு, ஏ.கே. சீனிவாசன், என். கணேசன், கா. அல்லாபிச்சை, பொ. இசக்கிபாண்டியன், எஸ். மலைராஜா, சிவந்திபுரம் ஊராட்சி துணைத் தலைவர் பா. பிராங்க்ளின், மற்றும்
விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →