முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்காலில் தண்ணீர் இல்லாமல்  கருகும் சம்பா பயிர்

காரைக்காலில் நிலம் புயலில் தப்பித்த சம்பா பயிர் தற்போது ஆறுகளில் தண்ணீர் வரத்தின்மையால் காயத் தொடங்கியுள்ளது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

காரைக்காலில் நிலம் புயலில் தப்பித்த சம்பா பயிர் தற்போது ஆறுகளில் தண்ணீர் வரத்தின்மையால் காயத் தொடங்கியுள்ளது.

காரைக்கால் பகுதியில் நிகழாண்டு நேரடி நெல் விதைப்பு மற்றும் காவிரித் தண்ணீர், மழை நீரை நம்பி விதைத்த பயிராக சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் தை மாத வாக்கில் அறுவடைக்கு தயாராகிவந்த இப்பயிர், தொடக்கத்தில் காவிரித் தண்ணீர் காலத்தோடு வரத்தின்மையாலும், பிறகு நிலம் புயலினால் ஏற்பட்ட மழையால் ஒருசில பகுதிகளில் பயிர் மூழ்கி பிறகு தண்ணீர் வடிந்ததும் தப்பித்தது. தற்போது பயிருக்குத் தேவையான அளவு தண்ணீர் வரத்து காரைக்கால் பகுதியில் இல்லாததால், நெடுங்காடு, அம்பகரத்தூர் சுற்றுவட்டாரம், திருநள்ளாறு, விழுதியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பயிர் காய்ந்துவருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்க காரைக்கால் மாவட்ட பொறுப்பாளர் என்.எம்.கலியபெருமாள் ஞாயிற்றுக்கிழமை கூறியது : சுமார் 110 நாளில் அறுவடை செய்யக்கூடிய பயிராக ஏடிடி 46 உள்ளிட்ட பயிர் காரைக்காலில் பல்வேறு விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விதைத்தனர். காரைக்கால் கடைமடைப் பகுதியாக இருப்பதன் காரணமாக வெள்ள காலங்களில் வயல் பகுதி மூழ்கி பயிர் சேதமடைவது ஒருபக்கம் இருந்தாலும், தண்ணீர் வரக்கூடிய காலத்தில் வராமல்போனால் பயிர் காய்ந்து விவசாயிகளுக்கு சேதத்தை உருவாக்குவதும் தொடர்கிறது. நிகழாண்டு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நிலம் புயலால் காரைக்காலில் பல பகுதிகளில் பயிர் சேதமடைந்திருக்கிறது. இந்த விவசாயிகள் பெரும் பொருளிழப்பை சந்தித்துள்ளனர். நிலம் புயலில் தப்பித்த ஏறக்குறைய ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமான நிலப்பரப்பு, தற்போது ஆறுகளில்  தண்ணீர் வரத்தின்மையால் காய்ந்து வருகிறது. காரைக்காலில் உள்ள பொதுப்பணித்துறையினர், தமிழக அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு, காரைக்கால் தேவைக்கான தண்ணீரை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் அடுத்த ஒரு வாரத்தில் பயிர் நாசமடைந்துவிடும் என்றார்.

இதுகுறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் க.மதியழகன் கூறியது : நிலம் புயல் பாதிப்படைந்த சில பகுதி விவசாயிகள், தற்போது குறுகிய கால நெல் புதிதாக விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்குத் தேவையான விதை விதை வேளாண்துறை தயாராக வைத்து விநியோகித்துவருகிறது. அதுபோன்றே உரத் தேவையையும் பூர்த்தி செய்கிறது. காரைக்கால் பகுதியில் எந்த ஆறுகளிலும் தண்ணீர் இல்லாததால் வேளாண் பணியில் ஈடுபட்டிருப்போர், தண்ணீரை எதிர்நோக்கியுள்ளனர். காரைக்காலில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் 2500 ஹெக்டேர் சம்பாவின் மூலம் சிறந்த உற்பத்தியை கொண்டுவர எல்லா முயற்சிகளையும் வேளாண்துறை எடுக்கிறது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →