முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்காலில் ரயில் சேவையை மேம்படுத்த மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் வலியுறுத்தல்

காரைக்காலில் ரயில் சேவையை மேம்படுத்த சீரிய கவனம் செலுத்துமாறு மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமியிடம் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

காரைக்காலில் ரயில் சேவையை மேம்படுத்த சீரிய கவனம் செலுத்துமாறு மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமியிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்காலில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமி சனிக்கிழமை காரைக்கால் வந்தார். காரைக்கால் ரயில் உபயோகிப்பாளர் நலச் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர் சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம் :

காரைக்கால் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதியும் மேம்படுத்தப்படாமல் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவடையவுள்ளது. குறிப்பாக பயணிகளுக்கு கழிப்பறை வசதி இல்லை. பயணிகள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திச் செல்வதற்கு எந்த வசதியும் இதுவரை ஏற்படுத்தவில்லை. வெளியூருக்கு செல்வோர், தொலைதூரத்திலிருந்து வந்து இறங்குவோர் பயனடையும் வகையில் கேண்டீன் வசதியும் அமைக்கப்படவில்லை.

திருச்சிக்கும், தஞ்சாவூருக்கும் தினசரி 2 பயணிகள் ரயில் செல்லும் நிலையில், ஒரு டிக்கெட் கவுன்டர் மட்டுமே இருப்பதால், பயணிகள் நீண்ட வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. கூடுதல் கவுன்டர் செயல்படும் வகையில் அமைப்பு இருந்தும், உரிய ஊழியர் நியமித்து செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் முனைப்பு காட்டவில்லை.

காரைக்கால் அருகே உள்ள திருமலைராயன்பட்டினத்தில் நிலையம் இருந்தும், பயணிகள் ரயில் நின்று செல்லவில்லை. இதனால் அப்பகுதியினர் கடும் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. பயனற்ற நிலையம், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவது கவலையளிக்கக்கூடியதாக உள்ளது.

உடனடியாக இந்த அடிப்படை தேவைகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். தொடர்ந்து, நாகூரிலிருந்து செல்லும் பயணிகள் ரயில்களை, ரயில்வே பட்ஜெட்டில் ஏற்கெனவே அறிவித்தவாறு  காரைக்காலில் இருந்து இயக்க விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும். ரயில்வே நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க மத்திய அமைச்சர் சீரிய கவனம் செலுத்தவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →