முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி.யில் தடையில்லா மின்சாரம் கேட்டு மின்வாரிய அலுவலகம் அ.தி.மு.க. கவுன்சிலர் தலைமையில் முற்றுகை

ஸ்ரீவில்லிபுத்தூரில் விசைத்தறி நெசவாளர்கள், தடையில்லா மின்சாரம் கோரி அ.தி.மு.க. கவுன்சிலர் டி.வி.கே.கந்தசாமி தலைமையில் செவ்வாய்கிழமை கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தை

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி.யில் தடையில்லா மின்சாரம் கேட்டு மின்வாரிய அலுவலகம் அ.தி.மு.க. கவுன்சிலர் தலைமையில் முற்றுகை

ஸ்ரீவில்லிபுத்தூரில் விசைத்தறி நெசவாளர்கள், தடையில்லா மின்சாரம் கோரி அ.தி.மு.க. கவுன்சிலர் டி.வி.கே.கந்தசாமி தலைமையில் செவ்வாய்கிழமை கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தை

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் விசைத்தறி நெசவாளர்கள், தடையில்லா மின்சாரம் கோரி அ.தி.மு.க. கவுன்சிலர் டி.வி.கே.கந்தசாமி தலைமையில் செவ்வாய்கிழமை கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப் பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெரு, மடத்துப்பட்டித் தெரு, மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர்கள் சுமார் 150 பேர் ஊர்வலமாக கோட்டைப்பட்டியில் உள்ள மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தை தொடர் மின்சாரம் கேட்டு முற்றுகையிட்டனர். பின்னர் கோட்ட செயற்பொறியாளர் பழனிவேலுவுடன் போராட்டக்குழு சார்பில் நகர்மன்ற அ.தி.மு.க. 16-வது வார்டு உறுப்பினர் டி.வி.கே.கந்தசாமி, 17-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் முத்துச்சாமி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

விசைத்தறி தொழிலுக்கு தொடர் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரி்க்கையை வைத்தனர். அப்போது குறைதீர் கூட்டம் நடத்த வந்த விருதுநகர் வட்ட மேற்பார்வை பொறியாளர் வஜ்ரவேலுவிடமும் இவர்கள் இதே கோரிக்கையை விடுத்தனர்.

அதிகாரிகள், நெசவாளர்களின் கோரிக்கையை அரசுக்குத் தெரிவிப்பதாயும், தன்னிச்சையாக எந்த ஒரு முடிவும் தங்களால் எடுக்க இயலாது என்று உறுதியாக தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →