திருவாவடுதுறை ஆதின 24ம் பட்டம் பொறுப்பேற்பு
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதின 24ம் பட்ட தம்பிரான் சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதின 24ம் பட்ட தம்பிரான் சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவாவடுதுறை ஆதீன 23ம் பட்டம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக சுவாமிகள் இன்று அதிகாலை காலமானதை அடுத்து, ஆதீனப் பொறுப்புக்கு திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கிளை மடமான திருவிடைமருதூர் ஆதீன தம்பிரானாக உள்ள சீர்வளர்சீர் மீனாட்சிசுந்தர தேசிக பரமாசாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.