மேலூர் பகுதியில் டெங்குவுக்கு மேலும் 4 பேர் பலி
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு இன்று மேலும் 4 பேர் பலியாயினர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு இன்று மேலும் 4 பேர் பலியாயினர்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் புளிப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி மனைவி லட்சுமி (30) என்பவர், ஒரு வாரமாக உடல்நலம் குன்றியிருந்தார். இந்நிலையில் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து பின்னர் மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார்.
மேலும், மேலூர் அருகில் உள்ள ஏ.வள்ளாளப்பட்டியில் 3 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். ராமன் என்பவரின் மனைவி வெள்ளையாம்மாள் (38) கடந்த 9ம் தேதி ஜி.ஆர்.எச்..சில் சேர்க்கப்பட்டு ஒரு வாரம் சிகிச்சையில் இருந்துவிட்டு வீடு திரும்பினார். பின்னர் மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்படவே, அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
மனோகரன் என்பவரின் மனைவி செல்வி (37) மற்றும், மெய்யன் என்பவரின் மகன் படிவாசல் கருப்பன் (40) ஆகியோர் இன்று காலை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.