வத்திராயிருப்பில் 104 மி.மீ. மழை: பிளவக்கல் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக வத்திராயிருப்பில் 104 மி.மீ. மழை பெய்துள்ளது.
தற்போதைய செய்திகள்வத்திராயிருப்பில் 104 மி.மீ. மழை: பிளவக்கல் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக வத்திராயிருப்பில் 104 மி.மீ. மழை பெய்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக வத்திராயிருப்பில் 104 மி.மீ. மழை பெய்துள்ளது.
இப் பகுதியில் பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளும் பருவமழையை நம்பி இருந்து ஏமாற்றம் அடைந்துவிட்டனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பின் இரவில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் பலத்த மழை பெய்தது. காலை 8.30 மணி நிலவரப்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் 34 மி.மீ., பிளவக்கல் அணையில் 52 மி.மீ., கோவிலார் அணையில் 54 மி.மீ., வத்திராயிருப்பில் 104 மி.மீ. மழை பெய்துள்ளது.
பிளவக்கல் அணைக்கு நீர் வரத்து இல்லாமல் இருந்தது. தற்போது பெய்த மழையை அடுத்து அணைக்கு வினாடிக்கு 27.27 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
அணையில் மொத்த கொள்ளளவு 192 மில்லியன் கன அடி. இதில் தற்போது 102.58 கன அடி தண்ணீர் உள்ளது. மொத்த ஆழம் 47.5 அடி. தற்போது 36.26 அடி தண்ணீர் உள்ளது.
இந்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு-அத்தித்துண்டு கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வாழைக்குளத்தில் இருந்து அணைத்தலை ஓடைக்கு தண்ணீர் சென்று கொண்டுள்ளது. தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னை தீரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.