முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு போராட்டம்

நெய்வேலி மின்சாரத்தை கேட்டுப் பெறாத தமிழக அரசை கண்டித்து தமிழக இளைஞர் முன்னணியினர் சிதம்பரம் கிளை மின்வாரிய அலுவலகத்தை பூட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:44 PM
பகிர்:

நெய்வேலி மின்சாரத்தை கேட்டுப் பெறாத தமிழக அரசை கண்டித்து தமிழக இளைஞர் முன்னணியினர் சிதம்பரம் கிளை மின்வாரிய அலுவலகத்தை பூட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக மேலவீதி காசுக்கடையிலிருருந்து தமிழக இளைஞர் முன்னணியினர் தமிழக இளைஞர் முன்னணி நகரைச் செயலாளர் ஆ.குபேரன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சிதம்பரம் கிளை மின்வாரிய அலுவலகத்தை சென்றடைந்தனர். அங்கு வாயிற்கதவை பூட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பூட்டை திறந்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக உழவர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.கே.தேவராசன், தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி நகர அமைப்பாளர் கு.சிவப்பிரகாசம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, தமிழக இளைஞர் முன்னணி நிர்வாகிகள் மணிமாறன், சுசன், சதீஷ், அழகர்சாமி, சுப்பிராயன், கதிரவன், சக்திவேல், வெங்கேடசன், சிவா, சம்பந்தம், பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments