இளைஞரை தாக்கி மிரட்டல் விடுத்த ராணுவ வீரர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூரில், இளைஞரை தாக்கி, மிரட்டல் விடுத்த ராணுவ வீரர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.
தற்போதைய செய்திகள்இளைஞரை தாக்கி மிரட்டல் விடுத்த ராணுவ வீரர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூரில், இளைஞரை தாக்கி, மிரட்டல் விடுத்த ராணுவ வீரர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில், இளைஞரை தாக்கி, மிரட்டல் விடுத்த ராணுவ வீரர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.
ஆலத்தூரைச் சேர்ந்தவர் காளிராஜ் மகன் சீனிராஜ் (21). இவர் ஆலத்தூர் ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவ்வழியே வந்த நொச்சிகுளத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் குருவையா மகன் சங்கிலிமுருகன் என்பவர், சீனிராஜை வழிமறித்து ஆபாசமாக பேசி கண்ணில் குத்தி, வயிற்றில் உதைத்தாராம். மேலும் இது குறித்து தந்தையிடம் கூறினால் தொலைத்துவிடுவேன் என்று மிரட்டினாராம். காயமுற்ற சீனிராஜ், மதுரை அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்லி காவல் நிலையத்தில் சீனிராஜ் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் கீதா வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராணுவ வீரர் சங்கிலிமுருகனை தேடி வருகிறார்.